அச்சிடுவதற்குத் தேவையான தகவல்களை எண்கள், எழுத்துக்கள், குறியீடுகளைப் பயன்படுத்தி உரிய சட்டத்திற்குள் அடுக்கும் செய்முறை. கரங்கள், பொறிகள், போன்றவற்றைப் பயன்படுத்தி அச்சுக்கோக்கும் செய்முறைக்கு உலோக எழுத்துகளும், கட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஔிப்பட முறை அல்லது ஔி மின்துகளியல் முறையில் படிமத்தை மீயாக்கம் செய்தும் அச்சுக்கோப்பு நடைபெறுகிறது. அச்சுக்கோப்பு முறைகளில் *ஔிப்பட அச்சுக் கோப்பு, *தன்னியக்க அச்சுக் கோப்பு, *எழுத்து அச்சுக் கோப்பு, *பொறிமுறை அச்சுக் கோப்பு, *செயல்திட்ட அச்சுக் கோப்பு, *கையச்சுக் கோப்பு என்பன குறிப்பிடத்தக்கன.