கையச்சுக் கோப்பு முறையில் பாவிக்கப்படுகின்ற, அடிப்பக்கம் ஒரு தட்டுடனும் தலைப்பகுதியிலும் மற்றுமொரு பகுதியிலும் அடைப்பான்களுடனும் அமைந்திருக்கின்ற பித்தளை, உருக்கு, அலுமினியம், நிக்கல் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட ஒடுங்கிய தட்டு. அச்சறையிலிருந்து அச்சுக்களை எடுத்துக் கோத்து வரிகளை அமைப்பதற்கு அச்சுக் கோப்பாளரால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு நீண்ட கருவி. இது பொதுவாக 8 புள்ளி அளவான 20 வரிகளைக் கொண்ட எழுத்துக்களை அடுக்கக்கூடியதாக இருக்கும்.
மேலும் பார்க்க < > அச்சிடுதல் உபகரணங்கள்