அச்செழுத்துக்களைக் கொண்டு கோக்கப்பட்ட செய்திகளை அல்லது அச்சுருக்களில் - படக்கட்டைகளில் வரையப்படுகின்ற படங்களை பல்வேறுபட்ட அச்சிடுதல் செய்முறைகளின் அடிப்படையில் பதிவெடுக்கும் முறைகள் உள்ளடங்கிய செய்முறை. அச்சிடுதல் செய்முறைகளில் *அச்சுப்பார்வைப்படி திருத்துதல், *செப்பனிடுதல், *பொறிப்படுத்துதல், *மீள்கோப்பு, *முழுநிறைவாக்கல் என்பன உள்ளடங்குகின்றன.