மரத்தினால் அல்லது எஃகுத் தகட்டினால் செய்யப்பட்ட, அச்சுக்கோர்ப்பதற்கு வேண்டிய எழுத்துக்களை வைப்பதற்குரிய அஞ்சறைப் பெட்டி போன்ற அறைகளுடைய பெட்டி. அச்சு அறைகள் சிறு சிறு குழியாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் எழுத்துக்கள் மொழிக்குத் தகுந்த மாதிரி பிரித்துப் போடப்பட்டிருக்கும். அச்சறையானது எழுத்துக்களின் புள்ளி அடிப்படையில்அமைந்திருக்கும்.