ஒரு ஆவணத்துக்குத் தயாரிக்கப்படுகின்ற முதன்மைப் பதிவு, துணைப்பதிவுகள், வழிகாட்டிப் பதிவுகள், பொருட்தலைப்புப் பதிவுகள் முதலிய அனைத்துப் பதிவுகளையும் ஒரே அகரவரிசையில் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் பட்டியல். இந்தவகையில் படைப்பாளர், துணைப்படைப்பாளர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தலைப்பு, தொடர் முதலிய சகல அம்சங்களுக்கும் தயாரிக்கப்படும் பட்டியல் பதிவுகள் ஒன்றாக ஒரே அகர வரிசை ஒழுங்கில் கோப்புப்படுத்தப்படுகின்றன. அகராதிப் பட்டியலின் அமைப்பையும் அதனைத் தயாரிப்பதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்கி சி.ஏ. கட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட அகராதிப்பட்டியலுக்கான விதிகள் என்ற நூல் வௌியீட்டுடன் இம்முறை அமெரிக்க நூலகங்களால் பின்பற்றப்பட்டு வந்தது. இன்றைய புகழ்பெற்ற ஆங்கிலோ அமெரிக்கப் பட்டியலாக்க விதி 11 அகராதிப்பட்டியல் விதிமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க < > பட்டியல்