1960 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமாமணிப் பட்டத்தைப் பெற்றவர். 1975 வரை வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இன்றைய யாழ்பாண பல்கலைக் கழகத்தின் முதலாவது வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியவர். லண்டன் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் யப்பான் நாட்டில் தோக்கியோப் பல்கலைக் கழகத்தில் அதிதிப் பேராசிரியராகவும் யப்பான நிறுவன உயர் புலமையாளராகவும் பணியாற்றியபின்னர் 1984 இல் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தென்கிழக்காசியவியல் பேராசிரியராக நியமனம் பெற்றார். இவர் தற்சமயம் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.