ஈழநாட்டின் பன்மொழிப் புலவர்கள் என நால்வரை முக்கியமாகக் குறிப்பிடுவர். அவர்கள் சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, தனிநாயகம் அடிகள் ஆகியோர் ஆவர். இவர்களுள் சுவாமி ஞானப் பிரகாசர் சமய வரலாற்றில் இருந்து கல்வெட்டு ஆராய்ச்சி வரை பல துறைகளில் வாழ்நாள் முழுவதும் இயங்கியவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூல்.
பேராசிரியர் கா.இந்திரபாலா அவர்களை பதிப்பாசிரியராகக்கொண்டு வெளியான சுவாமி ஞானப் பிரகாசர் : சிந்தனையும் பணியும் (1981) என்ற நூலின் சுருக்கப்பட்ட வடிவம் என இதனைக் கொள்ளலாம்.
பொருளடக்கம்
-
அறிமுகம்
-
வரலாற்றாய்வும் சுவாமி ஞானப்பிரகாசரும்
-
மரபுவழித் தமிழ்க்கல்வியும் சுவாமி ஞானப்பிரகாசரும்
-
மொழியாய்வும் சுவாமி ஞானப்பிரகாசரும்
-
சமயப்பணியும் சுவாமி ஞானப்பிரகாசரும்
-
பின்னிணைப்புகள்.