ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்தியிலும் பல்வேறு புதுமைகளையும் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்ட கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைக்குச் சொந்தக்காரார். தந்தை பெரியாரின் புத்தறிவுச் சிந்தனை, காரல் மார்க்சின் பொதுவுடமைச் சிந்தனை, பாப்லோ நெருடாவின் மனித நேயம், வால்ட் விட்மனின் புதுமை வேட்கை, பாரதியாரின் கவிதா அவேசம், பாரதிதாசனின் தமிழ் உணர்வு, பாஷோவின் இயற்கை சார்பு, வாழ்க்கைத் தத்துவச் சார்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் குறியீடாக அமைந்து, தன் பிறந்தகமான சென்னிமலையின் நெசவுதறிகளின் ஓசையிலிருந்து சந்தங்களைச் சேகரம் செய்துகொண்டு தனக்கெனத் தனித்துவமான கவிதைப் பாட்டையை அமைத்துக்கொண்டு அதில் நடை போடுபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். - - - வ.ஜெயதேவன் - - - (பேராசிரியர், தலைவர் - தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக் கழகம்)