கணினித்திரையில் பார்ப்பதை எழுத்து வடிவமாகப் பார்ப்பதற்கு இது உதவுகிறது. கணினித்திரையில் தெரிவதை மென்படி எனவும் தாளில் அச்சுவடிவில் பார்ப்பதை வன்படி எனவும் அழைப்பர். அச்சுப் பதியியை கணினிப்பொறிக்கு அறிமுகப்படுத்தும்வரை கணினி அதனை அறிந்திருக்காது. இதற்கென கணிமம் உண்டு. அதனை கணினிக்குள் செலுத்துவதன் மூலமே அச்சுப் பதியிக்கும் கணினிக்கும் இடையிலான இணைப்பை உருவாக்கலாம். ஒரு விநாடியில் அச்சிடும் எழுத்துக்களைக் கொண்டு cps என்றும், ஒரு நிமிடத்தில் அச்சிடும் வரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு lpm என்றும், ஒரு நிமிடத்தில் அச்சிடும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு ppm என்றும் அச்சுப் பதியியின் செயற்பாட்டு வேகங்கள் அளவீடு செய்யப்படுகிறது. இத்தகைய குறீயீடுகளை அவதானிப்பதன் மூலம் இவற்றின் தரத்தை நிர்ணயிக்கலாம். அச்சுப் பதியியிலுள்ள அச்சுமனையில் இருக்கும் குத்தூசிகளினால் குத்தி புள்ளிகளாகப் பதிக்கப்படுபவை *புள்ளி அச்சுப் பதியி எனவும் வர்ணத்தை தௌித்து பதிக்கக்கூடியவை *யச்சுப் பதியி எனவும் ஔியைப்பாச்சி பவுடரைத் தூவி பதிக்கக்கூடியவை *ஔியச்சுப்பதியி எனவும் அச்சுப் பதியிகளை மூன்று வகைப்படுத்தலாம்.