ஒவ்வொரு சொல்லடைவுச் சொல்லின் கீழும் வியாபகக் குறிப்பு, படிநிலையமைப்புத் தொடர்புகள், துணைத் தொடர்புகள் போன்றவற்றைக் காட்டக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதும், சொற்பொருளாய்வுக்களஞ்சியத்தின் முதன்மைப் பகுதி அகரவரிசை முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுமான சொற்பொருளாய்வுக்களஞ்சியம். பொதுவாக வழக்கிலுள்ளதும் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படுவதுமான இச் சொற்பொருளாய்வுக்களஞ்சியத்தில் தலைச்சொல்லும் அதன் உறவு முறைகளும் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எவ்வித தகவல் மீள்பெறுகைச் சொற்பொருளாய்வுக் களஞ்சியங்களிலும் இவ்வித காட்சியமைவு முறையே பொதுவானதாகக் கருதப்படுவதுடன் இது சொல்லடைவாளரும் தகவல் பயனரும் இலகுவில் பயன்படுத்தக்கூடியதுமாகும். சொற்பொருளாய்வுக் களஞ்சியம்.