அச்செழுத்துக்களைக் கொண்டு கோக்கப்பட்ட செய்திகளை அல்லது படக்கட்டையில் உள்ள படங்களை பதிவெடுக்கும் செய்முறை. பொதுவாக அச்சிடுதல் செய்முறையானது வேண்டிய தாளைச் சரிவரப் பொருத்துதல், அச்சுப் பரப்பின் மீது மை தடவுதல், மை தடவப்பட்ட பகுதியை தாளின் மீது பொருத்தியும் அழுத்தியும் பதிவு எடுத்தல், அச்சடிக்கப்பட்ட தாளை நீக்குதல் நான்கு முக்கிய நிலைகளை உள்ளடக்கியது.