அச்சிடுதல் முறையானது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஐந்து படிநிலைகளைச் சந்தித்திருக்கிறது. கோப்பதற்கு ஏற்ற தனித்தனி எழுத்துக்களைக் கண்டுபிடித்தது முதல் படிநிலையாகும். 400 ஆண்டுகளுக்குப்பிறகு அச்சுக்கோப்பு எந்திரம் கண்டுபிடித்தது இரண்டாம் படிநிலையாகும். இவற்றிற்கு மனித உழைப்பைப் பயன்படுத்தாமல் இயற்கை ஆற்றலைப் பயன்படுத்தியது மூன்றாம் கட்டமாகும். இந்தக் கட்டம் உயர்வேக, தொடர்புற்ற, பன்னிறச் சுழல் இயக்க அச்சு எந்திரத்திற்கு வழிவகுத்தது. ஔிப்படவியலை அச்சடிப்புச் செயல்முறைக்குப் பயன்படுத்தியது நான்காம் கட்டமாகும். முதலில் ஔிப்பொறிப்பு முறையும், பின்னர் மறுதோன்றி முறையும் அதன்பின் ஔி எழுத்துவரை முறையும் அச்சுக்கோக்கப் பயன்பட்டன. மின்னணுவியற் பயன்பாடுகளை அச்சுத்தொழிலுக்குப் பயன்படுத்தியது ஐந்தாம் கட்டமாகும். கணிப்பொறிகளைப் பயன்படுத்தியது வேகத்தை அதிகமாக்கித், தௌிவைக் கூட்டிக், கட்டுப்பாட்டை கச்சிதப்படுத்தித், திட்டமிடலையும் பொறிப்பான் ஆகிய மின்னணுவியல் அமைப்புக்கள் நிறப்பிரிப்பையும், அச்சுத்தட்டுப் பொறிப்பையும் தன்னியக்கச் செயல்முறைகளாக மாற்றின. மேலும் நிலைமின் முறையால் அச்சடிக்கும் போது மை பரவச் செய்யவும் கட்டுப்படுத்தவும் மின்னணுவியல் அமைப்புக்கள் ஏற்பட்டன. அச்சடிப்புத் துறையில் *தட்டுப் பதிவு முறை *சமதள அச்சுமுறை *குடைவு அச்சுமுறை *திரை அச்சுமுறை *நிலைமின் அச்சு முறை ஆகிய ஐந்து பொதுவகைச் செயல்முறைகள் பயன்படுகின்றன.