ஒன்றில் முதன்மைப் பொருட் பிரிவுகள் பகுப்பாக்க ஒழுங்கிலும் முதன்மைப் பொருட்பிரிவுகளின் கீழுள்ள அதன் உப பொருள்கள் அகரவரிசையிலும் இருக்குமாறு அல்லது முதன்மைப் பொருட்பிரிவுகள் அகரவரிசை முறையிலும் உப பொருட்பிரிவுகள் பகுப்பாக்க முறையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் பட்டியல்.
எ-டு :
கணிதவியல், புவியியல், வரலாறு, சட்டம், பொருளியல், பௌதிகவியல், இரசாயனவியல், புவிச்சரித்திரவியல் போன்ற முதன்மைப் பொருட்பிரிவுகள் ஏதாவது ஒரு பகுப்பாக்க ஒழுங்கைப் பின்பற்ற இரசாயனவியலின் உப பொருட்பிரிவுகளான சேதன இரசாயனம், அசேதன இரசாயனம், பௌதிக இரசாயனம், பொது இரசாயனம் என்பன அகரவரிசை ஒழுங்கைப் பின்பற்றியிருக்கும். ஒவ்வொரு உப பொருட்பிரிவுகளின் கீழும் உள்ள படைப்பாளர் மற்றும் தலைப்புப் பதிவுகள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
பொருட்பட்டியல்