மானக்கேடு பெரும்பான்மையின கறுப்பின மக்களுடைய ஆட்சி ஏற்பட்ட பின்னர் உருவாகிய யதாரத்தமான குழப்ப நிலையை நிலைக்களனாகக்கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். இந்நூல் இரண்டாவது தடவையாக Booker Price பெறும் சாதனையைப் படைத்தபோதிலும், ஆட்சியாளர்களின் கண்ண்டனத்தையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டது. நில அபகரிப்பு, குற்றச் செயல்கள், கற்பழிப்புகள், போலிஸ் பாதுகாப்பின்மை ஆகிய அவலங்களை மானக்கேடு தொட்டுக்காட்டுகின்றது. பிரச்சாரமோ, நீதிபோதனையோ செய்வதற்கு அவர் தமது எழுத்தினை என்றும் பயன்படுத்தியதில்லை. சூழ்நிலைகளை வாசகர்முன் நம்பும்திறனுடன் முன்வைத்து, முடிவுகளை வாசகனுடைய சுதர்மத்திற்கு விட்டுவிடுதல் அவர் கடைப்பிடிக்கும் இலக்கிய நாகரிகமாகும்.