தமிழ் மக்கள் வரலாற்றின் மூன்றாம் தொகுதியான இந்த நூலில் வட இந்தியாவில் இருந்து வந்து பரவிய வைதிக மதம், சமண, பவுத்த மதங்களால் தமிழர் வாழ்வில் நிகழ்ந்த பதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் விளைவால் தமிழர் தம் வழிபாடு, தம் பண்பாடு, தம் மொழி ஆகியவற்றைப் பேரளவு இழத்தல், வர்ணாசிரம தருமத்தையும் ஜாதி பேதத்தையும் தமிழர் ஏற்க வேண்டிய நிலை, சமண பவுத்த மதங்களின் வீழ்ச்சி, கோவிற்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சி, வட இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் நடந்த பிராமணியம் தழுவிய மாற்றங்கள், பல்லவர் வழியாக தமிழகத்தில் இறக்குமதியான வரலாறு ஆகியவற்றை விரிவாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கின்றன.
தமிழ்ச் சமுதாயம் காலந்தோறும் மாறி வந்த போக்கிற்கான சூழல்கள் கூடியவர் முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இச்சமுதாய மாறுதல்கள் யாரால் நிகழ்ந்தன் என்று விளக்கும்போது ஆசிரியர் நடுநிலையான ஆய்வு மேற்கொண்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.
ஆசிரியர் தலைசிறந்த கல்வியாளர்.ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறனும் படைத்தவர். ஆனால் தனது புலமைக்கு ஏற்பப் பண்டித நடையில் வாசகர்களை மிரட்டாமல் அனைவருக்கும் எளிதில் புரிந்து தெளியும் பொருட்டு இந்நூலை எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. "அற நெறிகள் இக்காலத் தமிழர்களிடம் பரவாமைக்கு காரணங்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை (12ம் அத்தியாயம்) அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய ஒன்று.
- - - 20.08.2006 - - -