தரமான நூல்களைத் தரும் நம் அறவாணர் அன்னைத் தமிழுக்கு அணிகலன் ஆனவர். வாழும் தலைமுறைக்கு உரைக்கல் ஆனவர். இவர் கால்படாதா நாடும், கை தொடாத ஏடும் இருக்குமோ...? எனக்குத் தெரியவில்லை சிந்தனை பழுத்துக் கனிந்த இவர் எழுத்துக்களில் தமிழ், தமிழ் மீதான அக்கறை... யாவும் தித்திக்கும் சர்க்கரை... இவரின் அனுபவங்கள் பேசத் தொடங்கினால்... ஒவ்வொருவர் வாழ்க்கையும் உட்கார்ந்து படாங் கேட்கும்.... சின்னச் சிட்டுக்குருவிக்கும் தமிழ் கற்றுக்கொடுத்து ஆகாயத்தை வலம் வர அனுப்பி வைப்பார்... பறந்துகொண்டேயிருக்கும் இந்தப் பண்பாளர் அன்பின் ஊற்று. எந்நாளும் படிப்பதுத், படைப்பதும் நெஞ்சத் துடிப்பாய் இருக்கும், இவர்.... ஒவ்வொரு நொடிக்கும் உற்சாகம் ஊட்டுபவர்.... எந் தமிழர் விழித்தெழ வழி காட்டுபவர்.... - - - கவிஞர் சென்னிமலை தண்டபாணி - - -