தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நம் நாட்டுக் கப்பற்கலை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராகவன், அ சாத்தன்குளம்
பதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 200
புத்தகப் பிரிவு : தொழில் நுட்ப வரலாறு
பக்கங்கள் : 320
புத்தக அறிமுகம் :
தமிழர்களின் கப்பற்கலை பற்றிய பல அரிய தகவல்களுடன், விளக்கப்படங்களுடன் நுண்கலைச்செல்வர் 1968 இல் எழுதிய புத்தகத்தின் மறுபதிப்பு. "இப்போது நாம் கடற்படை என்று கூறுகின்ற பொருளில் பழங்காலத்தில் ஒரு கடற்படை இருந்தது என்றால் அது சோழ சாம்ராஜ்யத்தின் கடற்படையேதான்" என்று ஒரு ஆங்கிலப் பேராசிரயர் பாராட்டும் அளவிற்கு தமிழர்களின் கப்பல் தொழில் முன்னேறி இருந்தது. அதிகமான தகவல்களுடன் விரிவான வரலாற்றுச் செய்திகளுடன் கப்பல் தொழில் பற்றித் தமிழில் வெளிவந்த முதலாவது நூல்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி

சிலப்பதிகாரம் மணிமேகலை சீவ கசிந்தாமணி பெருங்கதை கலிங்கத் துப்பரணி இலக்கியங்களில் கப்பல் கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறு வதை இந்நூல் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. கப்பல் குறித்த தகவல்கள் மிக விரிவாக வாய்மொழி வழக்காறு களில் இடம் பெறுவதன் மூலம் அதன் பழமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கப்பல் பற்றிய ஆய்வு, வணிகம் பற்றிய ஆய்வுடன் இரண் டறக் கலந்தது. கப்பல் கட்டுதலுக் கும் வணிகத்துக்குமான உறவு குறித்த தகவல்களை விரிவாகப் பதிவு செய்திக்கிறார் ஆசிரியர். தமிழில் இத்துறை குறித்த ஒரே நூல் என்ற சிறப்பை இந்நூல் பெற்றுள்ளது. - - - ஜூன் 2006 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan