சாத்தன்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் 1902 - 1981 நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் கல்வித்துறையில் ஆசிரியப்பணி, சுயமரியாதை இயக்கப்பணி, பொதுவுடமை இயக்கப்பணி எனப் பல பரிணாமங்களில் செயற்பட்டு, வளமான அனுபவங்களை உள்வாங்கியவர். தமிழர்களின் புழங்குபொருள் பண்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் இன்னமும் நிகழ்த்தப்பெறாத நிலையில், நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள் தமிழர்களின் புழங்குபொருள் பண்பாட்டை அறிவதற்கு உதவுகின்றன. தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர். கலைத்துறையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நூல்களை எழுதியவர்.