பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது கொற்கை. இந்த நகர் குறித்த தகவல்களை அறிவதற்கு இதுவரை செய்யப்பட்ட பல்வேறு அகழ்வாய்வுகளில் உள்ள செய்திகளை ஆசிரியர் தொகுத்துள்ளார்.
தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கொற்கை குறித்த செய்திகளையும் விரிவாகத் தொகுத்து அவற்றை ஆய்வு செய்கிறார். அதன் மூலம், பாண்டியர்கள் குறித்த விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொற்கையை ஆண்ட மன்னர்களின் துறைமுகமே காயல். இக்காயல் குறித்த மிக விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொற்கை நகருக்கு யவனர் வருகை தந்தமை, அதன் மூலம் ஏற்பட்ட வணிகம், கொற்கை சார்ந்த முத்துக்குளிப்புத் தொழில், காசுகள் அச்சடிக்கும் அச்சாலை உருவாக்கம் ஆகிய பிற செய்திகளும் இந்நூலில் உண்டு. தமிழ்ச் சமூக வரலாற்றை அறிய உதவும் சிறப்பான நூல் இந்நூல் என்றால் மிகையாகாது.
- - - ஜூன் 2006 - - -