தமிழகச் சிற்ப வகைகளில் விளக்குச் சிற்பத்திற்கு முதன்மையான இடம் உண்டு. தமிழகத்தில் விளக்கு, பயன்படுத்தப்பட்ட முறைகளை வரலாற்றுப் போக்கில் ஆசிரியர் இந்நூலில் சொல்லியுள்ளார்.
ஈழநாட்டைச் சேர்ந்த காலஞ் சென்ற கலைமேதை க. சண்முகநாதன், 300 க்கும் மேற்பட்ட திருவிளக்குகளைச் சேகரித்து வைத்திருந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலைத் தீபத்தின் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார். பல்வேறு தீபங்களின் படங்களை அழகுறத் தந்துள்ளார். இயற்கை வழிபாடை தமிழர்களின் வழிபாடு என்ற கருத்தாக்கத்தை உறுதி செய்து கொள்ள இந்நூல் அடிப்படையாக அமைகிறது. தமிழர்களின் சிற்ப வரலாற்றில் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் அவை சார்ந்த இடங்களுக்கும் உள்ள உறவை அறியவும் இந்நூல் பெரிதும் உதவும்.
- - - ஜூன் 2006 - - -