இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை 1876இல் முதன் முதல் அகழ்வாய்வு மேற்கொண்டது. இவ்வகழ்வாய்வு ஆதித்தநல்லூர் அகழ்வாய்வாகும்.
உலகில் இது வரை அறியப்பட்ட தொல்பழம் நாகரிகங்கள் குறித்தத் தரவுகளோடு, ஆதித்தநல்லூர் தரவுகளை ஒப்பிட்டுக் காணும்போது இந்நிலப்பகுதியின் பழமை குறித்த கருத்தாக்கம் உறுதிப்படுகிறது. இவ்வகையில் ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகிறது.
இந்நிகழ்வை முதன் முதலில் தமிழில் விரிவாகப் பதிவு செய்த சிறப் பை இந்நூல் பெறுகிறது. ஆதித்த நல்லூரில் அகழ்வாய்வு மூலம் கிடைத்த ஈமத் தாழிகள் தென்னிந்தியப் பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவுவதை இந்நூல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இரும்புக் காலம் மற்றும் வெண்கலக் காலம் ஆகியவற்றை அறிகிறோம். இவ் வகழ்வாராய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் மூலம் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல்.