உலகம் முழுவதும் மனிதர்களின் இடப் பெயர்வில் கடல்வழிப் பயணமே அடிப்படையாக அமைந்தது. இவ்வகையில் இன்றைய இந்தோனேசியாவின் சாவகத்தோடு அன்றைய தமிழர்களுக்கு உறவு இருந்ததை அறியமுடிகிறது.
இவ்வுறவால் சமயச் செல்வாக்கு முதன்மையாக அமைந்தது. கோயில்களைக் கட்டியதால் தமிழகக் கட்டிடக்கலையும் அங்குச் செல்வாக்குப் பெற்றது.
இந்தியாவிலிருந்து இந்தோனேசியாவிற்குப் பௌத்த நெறி, சிவநெறி ஆகிய பிற எவ்வகையில் சென்றன என்பது குறித்த செய்திகள் இந்நூலில் உள.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையில் வாணிபம் நடந்ததை நாம் அறிகிறோம். சாவகத்தின் இராமாயணம் மற்றும் பாவைக் கூத்துகள், தமிழகத்தில் உள்ள இராமயணம் மற்றும் பாவைக் கூத்துகளின் வடிவமாகவே இருப்பதை இந்நூல் வழி அறியலாம். இந்நூலைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும்.
- - - ஜூன் 2006 - - -