தமிழகத்தில் பழங்காலந்தொட்டு உருவாகி வளர்ச்சி பெற்று வந்தது தமிழிசை. தமிழிசை குறித்த ஆய்வில், பண்கள் குறித்த விவாதங்களே முதன்மையாக அமைகின்றன.
பல்வேறு அரிய தரவுகள் மூலம், பல்வேறு பண்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
தொல்காப்பியம் தொடங்கி விபுலானந்தர் வரை, பண்களின் வளர்ச்சி வரலாற்றைத் தமிழ் நூல்கள் வரையறுத்துக் காட்டியுள்ளன. பண் அமைப்புகளில் யாழ்க் கருவியோடு தொடர்புடையவற்றை மட்டும் விரிவாக இந்நூல் ஆய்வு செய்கிறது. யாழின் தோற்றம் குறித்தும் இந்நூல் ஆய்வு அமைந்துள்ளது. யாழ் எவ்விதம் பின்னர் வீணையாக வடிவம் பெற்றது என்பது குறித்த ஆய்வே மிக முக்கியமானதாகும். இவ்வாய்வு நூல் தமிழ்ச் சமூக வரலாற்று மாணவர்கட்கு அரிய விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
- - - ஜூன் 2006 - - -