தாமரைப் பூ, தமிழ்ச் சமூகத்தில் இடம் பெறும் முறைமையும், தாமரை வடிவச் சிற்பங்கள், தாமரை ஓவியங்கள் ஆகியவை தமிழகத்தில் இடம் பெற்றிருக்கும் தன்மைகளையும் இந்நூல்வழி நாம் அறிய முடிகிறது.
தாமரை, தமிழர்களின் மருத்துவம் தொடர்பான பொருட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
காசுகளில் வரைந்துள்ள உருவங்களில் ஒன்றாகத் தாமரை உள்ளது.
கட்டடத் தூண்கள், கோபுரங்கள் யாவிலும் தாமரை ஓவியமாக, செதுக்கலாகத் தமிழகமெங்கும் காலாதி காலமாக அமைந்து வருகிறது.
இந்நூல் தமிழகத்தின் கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றைப் பயில முனைவோர்க்குப் பெரிதும் உதவும்.
- - - ஜூன் 2006 - - -