1929 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தவர். புதுக்கோட்டை, சிவகங்கை, விஜயவாடா கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1955 முதல் கொல்கத்தாவாசி. வங்காளி, இந்தி, ஜெர்மன் மொழிகள் கற்ற இவர், இம்மூன்று மொழிகளிலிருந்தும் ஏராளமான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், திருக்குறளை வங்காளியிலும் மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதமியின் மொழி பெயர்ப்புப் பரிசு, மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் நினைவுப்பரிசு, கொல்கத்தா சரத் சமிதியின்சரத் ஆராய்ச்சிப் பரிசு எனப் பல்வேறு அவ்கீகாரங்களைப் பெற்றவர்.