கொ.மா.கோதண்டம் (1938.09.15) கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழில் எழுதி வருகிறார். ராஜபாளையம் சாத்தனார் இல்லத்தில் அமைந்துள்ள காந்தி கலை மன்றம் நூலகத்தில் பணியாற்றுகிறார் . இதுவரையில் முப்பதிற்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். தமிழ் சிறுகதை எழுத்தாளர்களுள் ஆழ்ந்த கொள்கைப் பிடிப்புடன் சமூகச் சிக்கல்களை நடப்பியல் பார்வையில் விமர்சிக்கும் எழுத்தாளர்களுள் ஒருவராக இவரை அடையாளப்படுத்தலாம். இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அழகியல் உத்திகளோடு, மனித நேயம், மத நல்லிணக்கம், சமரச அன்பு, பிறருக்கு உதவுதல் போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் பொதுவுடமைச் சிந்தனைகளோடு போர்க்கொடுமைகள், சமுதாய எதிர்ப்பு, மனிதநேயம்,நட்புறவு, பொன்ற பாடுபொருள் கொண்டுள்ளன.