"நான் நாடோடியும் அகதியுமானவள்" என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. ஈழத்தில் நிலவும் நெடியதும் கொடியதுமான போர்ச்சூழலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்து, அங்கு வெளிவரும் பத்திரிகைகளில் கலைவாணி இராஜகுமாரன் என்ற பெயரில் 1996 இலிருந்து 2003வரை கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், விமர்சனங்கள் எழுதிவந்தார். கனடாவின் இயந்திரவாழ்வின் மீது அதிருப்தியுற்று ஈழத்திற்குச் சென்று வாழமுற்பட்டவரை, மீண்டும் தொடங்கிய போர் விரட்ட, இப்போது சென்னைவாசியாகி இணையத்திலும் சிற்றிதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.இயற்பெயர் கலைவாணி.இ