1976 முதல் அச்சுத்துறையின் பல்வேறு பிரிவிகளிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் ஜெகதீசன் வீரநாதன். இவர் கோவையச் சேர்ந்தவர். இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் வழில் டெஸ்க்டாப் பப்ளிஷருக்கு அஞ்சல் வழியில் வகுப்புகளை இவர் நடத்தியுள்ளார். தமிழில் கணினி வரைகலைக்காக தனியான மாத இதழ் ஒன்றை "சங்கமம்" என்ற பெயரில் நடத்தி வருகிறார். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் கல்வி, மேலாண்மை பற்றி எழுதிய கட்டுரைகள் தமிழகத்தின் பிரபல நாளிதழ்களிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழில் முதல் மற்றும் முன்னணி கணினி துறைக்கான இதழான "தமிழ்க் கம்ப்யூட்டர்" இதழில் "அடோபி இல்லஸ்ட்ரோட்டர்" என்னும் மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரைத்தொடரை இவர் தற்பொழுது எழுதி வருகிறார். கோவையில் பாலாஜி கணினி வரைகலை பயிலகத்தினை நடத்திவருகிறார். இதுவரையில் ஆறு தமிழ் நூல்கள் எழுதியுள்ளார்.