அலுவலகப் பயன்பாட்டில் மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்கள், இல்லங்கள் என்று எல்லா இடங்களிலும் கணினி பயன்பாட்டில் எம்எஸ் ஆபீஸ் தொகுப்பின் முக்கியத்துவம் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வேர்டு, எக்ஸெல் மற்றும் பவர்பாயின்ட் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
இந்தப் புத்தகம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் அடிப்படையை விரிவாகக் கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நமது பயிலகம் வெளியிடும் புத்தகங்களில் முதல் முறையாக, அதிகமாக படங்கள் மூலமாக செய்திகளை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். ஆம், படித்து அறிந்து கொள்ளுவதைக் குறைத்து பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் எம்.எஸ். ஆபீஸைத் துவக்கி நேரடியாக செயல்முறையாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்தப் புத்தகத்தில் எம்எஸ் ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வேர்டு, எக்ஸெல், பவர்பாயின்ட் மட்டுமல்லாது அந்தத் தொகுப்பில் உள்ள பப்ளிஷர், அக்சஸ் உள்ளிட்ட அனைத்து மென்பொருட்களுக்கும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற புத்தகம் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.