சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 12.08.1928 இல் பிறந்த இவர் 1948 முதல் 43 ஆண்டுகள் ஆசிரியப்பணியும், ஆய்வுப் பணியும் ஆற்றியவர். மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு முடிய அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பாட மொழியும் பயிற்ச்சிமொழியும் ஆகச் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். உயர் க்லவி அனைத்தும் தமிழிலும் தர வேண்டும். தமிழ்வழி உயர் கல்விக்குத் தனிப்பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும். தமிழே முழுமையான ஆட்சிமொழியாக வேண்டும். தமிழ் கற்றவர்க்கும் தமிழ்வழி கற்றவர்க்கும் மட்டமே தமிழகத்தில் நடைமுறையில் வேலை வாய்ப்பும் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் தரப்படல் வேண்டும். தமிழர் கட்டிய திருக்கோவில்களில் தமிழே அருச்சனை மொழியாதல் வேண்டும். தமிழர் சடங்குகளை தமிழிலேயே நடைபெற நம்பிக்கையூட்டி நடைமுறைப்பட்டுத்ல் வேண்டும். இசையரங்குகளில் தமிழிசையே பாடப்பட்ல் வேண்டும். தமிழகத்திற்குள் தமிழ் நீதிமன்றப் பயன்பாட்டு மொழியாக வேண்டும். நடுவணரசு தமிழை செவ்வியல் மொழியாக அறிவித்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தேசிய மொழிகளில் ஒன்றாகிய தொன்மை மிக்க தமிழைப் பாராளுமன்ற நடைமுறை மொழியாக ஏற்க வேண்டும். திருக்குறள் இந்திய தேசிய நூலாக அறிவிக்கப்படல் வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தழைக்க வேண்டும். இவற்றிற்காக அறவழியில் அல்லும் பகலும் அமைதிப் புரட்சிக்கு முயல்வதே இவரின் வாழ்வாகும். பேராசிரியர் மு.வ வின் தமிழ் மரபுத் தோன்றல் எனக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவர் இவர்.