1960 முதல் தம்மைத் தமிழ் ஆய்விலும், தமிழக வரலாற்றாய்விலும் ஈடுபடுத்திக்கொண்டவர் இந் நூலாசிரியர். 1971 முதல் 1988 வரை முதுகலை வரலாற்று மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்க கிடைத்த வாய்ப்பில் உலக நாகரீகம், பண்டைய இந்திய வரலாறு, தமிழக வரலாறு, ஆகிய வரலாற்றுப் பகுதிகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகித் தமது தமிழக வரலாற்றாய்வின் ஒப்பாய்வில் வளம் படுத்தியுள்ளார்.