திருநெல்வேலிமாவட்டம் மேலப்பாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எம்.ஏ பட்டதாரி, சென்னை புதுக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் 1962-1997 வரையான காலத்தில் வானொலி மற்றும் இந்தியத் தொலைக்காட்சியின் ப்லவேறு நிலையங்களில் பணியாற்றியவர். புதுவையில் புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். 35 ஆண்டுகள் மக்கள் தொடர்பு சாதனங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.