சிவராஜ் எளிமையான கவிதை மனிதன். தண்ணீரைப்போலவும் காற்றைப்போலவும் இயல்பாகப் பழகுபவன். அவனது கிராமத்தின் மண்வாசனையையும் நகரத்தில் முகம் மறைக்கும் புழுதி மண்டலத்தையும் கவிதைகளாக வடிப்பதில் தேர்ந்தவர். நிகழ்கால வாழ்வின் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் எள்ளல் பாணியில் கவிதைகளாக்குவதில் வல்லவர்.