செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் ஆழ்ந்த பல்துறைப் புலமையோடு தமிழ்ச்சொற்களின் வேர்களையும் வேரொப்புமைகளையும் கூர்ந்து ஆராயும் நுண்மதி பெற்றவர்.சிதறிக் கிடந்த நூற்பாக்களைத் திரட்டி காக்கை பாடினியம் என்ற நூலை உருப்படியாக்கி, விரிந்த உரையும் வரைந்த இலக்கணப் பணியாளர். தமிழின் மொழியாற்றலை உறுதி புடுத்தும் திறம் இவர் எழுத்தாண்மைக்கு உண்டு. உள்ளும் புறமும் ஒத்த தமிழ்த்தொண்டர். - - - வ.சுப.மாணிக்கனார் - - -