யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட தி.ஞானசேகரன் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல், நூல் பதிப்பும் வெளியீடும், இதழியல் ஆகிய துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மலையகத்தில் மருத்துவராக பணிபுரியும் இவர் கடந்த 40 வருடங்களாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையில் 8 நூல்களை எழுதியுள்ளார். இவரது புதிய சுவடுகள் (1977), குருதி மலை (1979) என்ற இரு நாவல்கள் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவை. இலங்கை அரசின் கலாபூஷணம் என்ற விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர் "ஞானம்" என்ற மாதாந்த கலை இலக்கிய சஞ்சிகையை 2000 ஜூன் முதல் வெளியிட்டு வருகிறார்.