தமிலக்கிய கவிஞரும், ஆன்மிக இலக்கிய உரைஞருமான புலவர் மா.கி. இரமணன் (14-08-1953) - இல் மயிலாடுதுறையில் (மாயூரம்) திரு. மு. கிருஷ்ணமூர்த்தி - திருமதி சரோஜா ஆகிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். M.A., M.Phil., மதுரை பல்கலைக்கழகத்திலும், M.Ed., D.I.T. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், Ph.D சென்னை பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இவர் துணை தலைமையாசிரியராக லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறார். இவர் 'தமிழ் மொழியும் இலக்கியமும்', 'காவியம் கண்ட நாயகியர்', 'கந்தன் கனியமுதம்', 'பட்டினத்தார் தாயன்பு', 'திருமந்திரம்' போன்ற பல்வேறு நூல்களை எழுதியும், தெலுங்கிலிருந்து 'தியாகராஜர் கீர்த்தனைகள்' என்ற நூலை தமிழுக்கும், சமஸ்கிருதத்திலிருந்து 'திருமண மந்திரங்கள்' என்ற நூலையும் மொழி பெயர்த்துள்ளார். இவரது படைப்புகள் குமுதம், அமுதசுரபி, கலைமகள், செந்தமிழு செல்வி போன்ற வார, மாத இதழ்களில் வெளி வந்துள்ளது. இவரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி தினமணி, தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களில் இவருடைய புகைப்படத்துடன் வெளியிட்டு கெளரவித்தது. இவருக்கு 'பாரதி தமிழ்ப் பணிச் செல்வர்' என்று டாக்டர் விக்கிரமன் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் இவர் 200க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார்.