இல்லோர் புரவலராய் எளியோர் செம்மலாய் வாழ்ந்து மறைந்த புலிசைவாணர், அருள்விளக்க அம்மையார் திருமதி பழனியம்மாள் ஆகியோருக்கு அருமை மகனாய் பிறந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியத் துறைத் தலைவராகவும், கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன இயக்குநராகவும் இருந்து திட்டமிட்டுச் சிறப்பாக கடமையாற்றியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். கல்வியுலகம், ஆய்வுலகம் என்பதோடு நின்றுவிடாமல், எப்போதும் வெளியுலக மக்களோடு இணைந்து, மேம்பாட்டுப் பணிகளில் தன்னை மகிழ்ச்சியோடு இணைத்துக்கொள்பவர்.