தையல்முத்து தனராஜ் மாணவ ஆசிரியராகத் தனது கல்விப் பணியினை ஆரம்பித்தவர். தொடர்ந்து ஆசிரியர் கலாசாலை, பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டங்கள் பெற்றுத் தனது தகுதியை, ஆளுமையை வளர்த்துக்கொண்டவர். பன்னாட்டு கல்விசார் பயிற்சிகளிலும் கல்வி மாநாடுகளிலும் பங்குபற்றியவர்.
இன்று கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், வளவாளராகவும், ஆய்வாளராகவும் பரிணமித்து வருபவர். கற்றல், தேடல், ஆய்வு என்பதை தனது பண்புசார் கோலங்களாக வெளிப்படுதுபவர். தமிழ்மொழி மூலமான கல்விச்சூழல், புலமைத்துவம் தொடர்பான அகல்விரி சிந்தனைகளையும், விமரிசனங்களையும் மற்றும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டு இயங்குபவர்.