கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி மட்டக்க்ளப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரிய கல்வியாளராகப் பணிபுரிகின்றார். நிறைய அனுபவம் கொண்டவர். இவர் கற்றல் கற்பித்தல் பணியுடன் மட்டமுல்லாமல் ஆய்வாளராகவும் தன்னை வளம்படுத்திக்கொண்டவர். தொடருறு கல்விச் செய்றபாட்டின் பண்புசார் கல்வி தரவிருத்திக்காகச் கல்விச் சமூகத்தின் பல தளங்களிலும் தீவிர இயக்கம் கொண்டவர்.
சுயதேடல், சுயகற்றல், மற்றும் ஆய்வுசார் பண்பாட்டு மயமாக்கலில் புத்தாக்கமாகப் புத்துணர்ச்சியுடன் ஈடுபட்டு வருபவர். கோட்பாடும் பிரயோகமும் சார்ந்து புதிய ஆய்வுக் களங்களை வெளிப்ப்டுத்துபவர்.