பேராசிரியர் முனைவர் ச.முத்துலிங்கம் கல்வியியல் துறைசார் முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர். இவர் தமிழில் கல்வியியல் துறையின் விரிவுக்கும் ஆராய்ச்சிக்கும் புதுத்தடம் அமைத்துக் கொடுத்தவர். இன்று கல்வியியல் பன்துறை அறிகை மரபுகளின் குவிமுனையாக தமிழில் மேலெழுச்சி பெற்று வருவதற்கு தெளிவான சிந்தனைப் புலத்தையும் ஆய்வுக் களத்தையும் உருவாக்கி வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு கொண்டவர். கலவி உளவியல் எனும் பொருட்பரப்பில் ஆசிரிய மாணவர்களை முழுமையாக ஈடுபாடு கொள்ளவும் இச்சிந்தனைத் தொடர்ச்சியின் முளுமையை உள்வாங்கவும் சாதகமான சூழலை உருவாக்க முன்னின்று உழைத்தவர். இத்துறைசார் அடிப்படை எண்ணக்கருக்களை அறிக்கை மரபுகளை தமிழில் தெளிவாக எடுத்துரைக்கும் முறைமைக்குத் தடம் அமைத்தவர்.