இவரது கவிதைகளில் உணர்வைவிட சிந்தனைக் கனதி முனைப்பாக இருக்கும். புகழ்பெற்ற பாரசீக சூபிக் கவிஞர் மௌலான றூமியின் கிதாபுல் மஸ்னவியில் உள்ள கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து மௌலான றூமியின் சிந்தனைகள் (1969 ) என்ற பெயரில் வெளியிட்டார். இக்பால் கவிதையில் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதற்கு உதுவும் ஒரு உதாரணம். - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்