சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் புவியியல் கற்கையின் சமகாலச் செல்நெறிகளையும் மாற்றங்களையும் உடனுக்குடன் உள்வாங்கி கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் புதிய நுட்பங்களை விருத்தி செய்து வருபவர்.
சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சிகளை இற்றைப்படுத்திக் கொண்டு புதிய ஆய்வுக் கலாச்சார விருத்தியிலும் முனைப்புடன் இயங்குபவர். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளிலும் ஆய்விதழ்களிலும் கட்டுரைகள் வழங்கி வருபவர்.
தமிழ்மொழி மூலமான புவியியல் கற்றைசார் புலமையின் விரிவாக்கத்திற்கு வளம் சேர்த்து வருபவர். இத்துறைப் பேராசிரியர்களின் வழித்தடங்களிலிருந்து மாறுபட்டு இயங்குபவர்.