வளம் நிறைந்த வன்னிமண் தந்த பெருமகன் கந்தையா ஐயம்பிள்ளை. அரசபணியில் எழுதுநராக ஆரம்பித்து நிர்வாகசேவை வரை உயர்ந்தவர். கொழும்பு, திருகோணமலை எனப் பல இடங்களில் பணியாற்றியுள்ளார்.
வவுனியா சிந்தாமணி ஆலய அறங்காவலர் சபை, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மணிவாசகர் சபை, தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் பொதுப்பணியாற்றிவர்.
கல்லூரி மாணவனாக அகில இலங்கை ரீதியிலான சைவசமயப் பாடப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றதன்மூலம் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அருவி, எழுச்சி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் முத்திரை பதித்தவர்.