கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்புதூரில் பிறந்த பி.சி.சண்முகம் தன் எழுத்துப் பணியினை 1961 இல் துவக்கினார். பத்துக்கு மேற்பட்ட நாடகங்களையும் நூறுக்கு மேற்பட்ட கவிதைகளையும் ஆக்கியுள்ள போதிலும் உங்களால் உலகம் எனும் ஒரு நூல் மட்டுமே வெளிவந்துள்ளது. முற்போக்கு கருத்துக்களைக் கொண்ட இவர் கலப்புத் திருமணம் செய்தவர். தன்னுடைய மகன்களுக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தவர். தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.