கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப்பணிகளில் ஈடுபட்டுவரும் யோ.திருவள்ளுவர், பெல்ஜியத்தில் உள்ள பன்னாட்டு சமூகசேவை அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இந்தியர்களும் பிற மூன்றாம் உலகநாட்டுத் தொழிலாளர்களும் படும் துயரங்கள் தொடர்பில் பல நாடுகளுக்கு ஆய்விற்காகச் சென்று வந்துள்ளார். தலித் விடுதலை, உலகமயமாதல், பெண் விடுதலை, மதவாதம், பயங்கரவாதம் போன்றவை தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்.