மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளை பின்பற்றி அடித்தள மக்கள் நலனை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கற்பிதங்களின் தேசம், சேதுக்கால்வாய்த் திட்டமும் இராமேஸ்சுவரம் தீவு மக்களும் சில குறிப்புகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். பகிர்வு, உரிமைப் போராட்டம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும், புதிய தடம் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செய்ல்பட்டவர். இராமேஸ்சுவரத்தில் புதியதடம் நிகழ்த்திய மக்களுக்கான மாற்று சினிமா அரங்கிலும், மதுரையில் புதிய காற்று ஏற்பாடு செய்த தமிழ்ச் சினிமா அகமும் புறமும் கருத்தரங்கிலும் செயலாற்றியவர்களில் ஒருவர். போதி இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.