தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
சண்முகசுந்தரம், ச
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர் பெயர் :
|
Shanmugasindaram, S
|
பிறந்த ஆண்டு :
|
1939
|
|
|
மின்-அஞ்சல் :
|
s_shanmugasundar@yahoo.com
|
தொடர்பு எண் :
|
914422520942
|
முகவரி :
|
1/41, தனம் நகர்
|
|
முகலிவாக்கம்
|
|
சென்னை
-
600116
|
|
இந்தியா
|
|
|
|
|
|
|
|
|
|
-
ஓய்வு பெற்றது : 1997ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள்
-
இறுதியாக வகித்த பதவி : வனத்துறைத் தலைவர்
-
அடிப்படைக் கல்வி : முதுகலை அறிவியல் (தாவர இயல்)
-
தொழில்நிலைக் கல்வி:முதுகலைஅறிவியல்(வனவியல்)இந்தியவனக் கல்லூரி, டெஹ்ராதூன், உத்தராஞ்சல (முந்தைய உத்திரப் பிரதேசம்)
-
வெளிநாடு சென்றமை :இந்தியாவில் சமூகநலக் காடுகள் திட்ட வரைவின் முன்னவர் என்பதால் 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு சமுதாயக் வனவியல் கருத்தரங்கத்திற்கு உலக உணவு மற்றும் வேலாண்மை நிறுவனத்தின் பரிந்துரையின்படி இந்திய நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டது
-
பெற்ற சிறப்புப் பயிற்சிகள்
-
டெஹ்ராதூனில் உள்ள இந்திய வனக் கல்லூரியில்> காடுகளின் அறுவடையைத் திட்டமிடும் வழிமுறைகள்
-
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு மன்றத்தில் வேளாண் மற்றும் வனவியல் திட்டங்களை வடிவமைக்கும் - மதிப்பீடு செய்யும் வழிமுறைகள்
-
ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாகக் கழகத்தில் மனிதவள மேம்பாட்டு வழிமுறைகள்
-
உத்திரப் பிரதேசத்தின் லக்நௌ நகரில் உள்ள மேலாண்மை மேம்பாட்டுக் கழகத்தில் பொது மேலாண்மை வழிமுறைகள்
-
சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மைக் கழகத்தில் திட்ட மேலாண்மைத் வழிமுறைகள்
-
சென்னையில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேமபாட்டு மேலாண்மை வழிமுறைகள்
அரசுப் பணிக்காலத்தில் நிகழ்த்திய சிறப்புச் சாதனைகள்
-
தமிழ்நாடு சமூகநலக் காடுகள் திட்டத்தை வரைந்து வார்த்தது. அத்திட்ட வடிவமே பின்னாளில் சுவீடன் நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டில் வனத்துறையின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடு சமூகநலக் காடுகள் திட்டத்திற்கு அடித்தளமாக விளங்கியது. எமது இந்தத் திட்டம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்ட சமூகநலக் காடுகள் திட்டத்தின் முன்னோடி விளங்கியது.அரசுப் பணிக்காலத்தில் நிகழ்த்திய சிறப்புச் சாதனைகள்
-
மேற்கண்ட பின்னணியில் ரோம் நகரில் இயங்கும் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டின் சியாங்மாய் நகரில் நடைபெற்ற ‘ஊரக மேம்பாட்டிற்கு சமுதாயக் வனவியல்’ என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் இந்திய நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டது.
-
நன்மர அட்டவணை என்னும் புதிய கொள்கையினை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு வனச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரச் செய்தது.
-
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு வன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாடல் மதிப்பீடுகளை வரைந்து சீர்மை செய்தது.
-
இந்திய திட்டக்குழு எல்லா மாநிலங்களையும் தமக்கான 20ஆண்டு தொலைநோக்கு வனவியல் செயல் திட்டத்தை வரையச் சொல்லி அறிவுறுத்தியது. அதற்கொப்ப தமிழ்நாட்டிற்கான 20ஆண்டு தொலைநோக்கு வனவியல் செயல் திட்டத்தை வரைந்தது.
-
இத்திட்டத்தை வடிவமைக்கும் முகத்தான் தேவைப்படும் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் தேர்ந்தெடுக்கும் புதியதொரு வழிமுறை கண்டறியப்பட்டது. இந்த வழிமுறை வனவியல் அறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்டதுடன் அதைப் பலரும் கைக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.
-
திசு இணக்கத் தொழில் நுட்பத்தை மரக் கன்றுகளில் பயன்படுத்தி வனப்பயிர் விளைச்சலைப் பலமடங்காகப் பெருக்க இயலும் என்ற கருத்தினைக் கொண்ட எமது அறிவயில் கட்டுரை 1992ஆம் ஆண்டு பாரீசு நகரில் நடைபெற்ற உலக வனவியல் மன்றில் மிகுந்த பாராட்டுதலுடன் ஏற்கப்பட்டது.
-
வனப் பயிற்சி(T), ஆராய்ச்சி(R), கல்வி(E) மற்றும் விரிவாக்கம்(E) ஆகிய அறிவியற் செயல்பாடுகள் யாவற்றையும் ஒருசேர வழங்கவல்ல TREE என்னும் இடுகுறிப் பெயரில் நிறுவனம் ஒன்றை தமிழ்நாட்டில் நிலைப்படுத்த திட்டம் ஒன்று வார்க்கப்பட்டது. இத்திட்டத்தின் பல்வேறு சிந்தனைகள் பின்னாளில் தமிழகம் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் வனத்துறையின் வன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளைப் புனரமைக்கப் பயன்பட்டன.
-
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தமிழ் மூதறிஞர் வ.அய். சுப்ரமணியம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்ற தாவரங்களின் இன்றைய பெயர்களைக் கண்டறிய ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்து அதற்கான வழிகாட்டுதலை வழங்கியது.
-
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தபோது ‘குளோனிங்’ தொழில்நுட்ப முறையில் வனத் தோட்டங்களை வளர்க்கும் விதத்தைத் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தது
-
1987ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு வனத்துறையில் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் வனத்தோட்டக் கழகத்தின் நிர்வாகப் பணிகளுக்கும் கணினியைப் பயன்படுத்தி கணினிப் பயன்பாட்டை வனத்துறையில் முதன்முதலாகத் தொடங்கி வைத்தது.
-
கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையின் ரப்பர் தோட்டத் திட்டத்தின் மீது பொருளாதார ஆய்வு செய்து ஓர் அறிக்கையாக வனத்துறைக்கு வழங்கியது. பின்னாளில், தொழிலாளர்களின் ஊதியங்களை வகுத்தெடுக்க அந்த ஆய்விலிருந்து பெறப்பட்ட கண்டுபிடிப்புகளும் விபரங்களும் ரப்பர் தோட்டத் நிர்வாகத்திற்கு வழிகாட்டியாகப் பயன்பட்டன.
-
நீலகிரி மாவட்ட வனத்துறையின் தேயிலைத் தோட்டத் திட்டத்தின் மீது பொருளாதார ஆய்வு செய்து திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து திட்டத்தை மேற்கொள்வதற்கான நியாயத்தை ஓர் அறிக்கை வாயிலாக உறுதி செய்தது.
-
திட்டப் பணிகளை திறமையுடனும் நேர்த்தியுடனும் செயல்படுத்தக் கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பமான PERT கருவியை வனத்துறை நிர்வாகத்தில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் தேயிலைத் தோட்டத் திட்டத்திலும் திருச்சி மாவட்ட வனத்தோட்டக் கழகத்திலும் அறிமுகப்படுத்தியது.
-
தமிழக வனச் செல்வங்களின் மேலாண்மைக்காக 7ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தை வரைந்தது. இந்த வரைவு இந்திய நாட்டிலேயே மிகச் சிறப்பான ஒன்று என்று புகழ்பெற்ற இந்திய திட்ட வல்லுநர் ஒருவரால் (திரு சிவராமன் ஐஊளு) பாராட்டப் பெற்றது.
அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு நிகழ்த்திய சிறப்புப் பணிகள்
-
உலக வங்கித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இதுகாறும் அறியப்படாமல் மறைந்து கிடக்கும் வன அறிவியல் கருத்துக்களைத் தேடிச் சேகரித்து அவற்றை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் குழுமத்திற்கு அனுப்பிவைத்தது.
-
மேற்கு வங்க அரசு> இந்திய அரசால் வடிவமைக்கப்பட்ட விறகு மற்றும் தீவனத்தழை பெருக்கத்திற்கான வனத் தோட்டத் திட்டத்தை தமது பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்த பலதரப்பட்டப் பணிகளின் மீது அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகள் நடாத்தி அவற்றின் உண்மை நிலைவரத்தை கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் இந்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வைத்தது.
-
இந்திய அரசின் தேசிய காடு வளர்ப்பு மற்றும் இயற்கைச் சூழல் மேம்பாட்டு வாரியம் வழங்கிய காடு வளர்ப்புத் திட்டத்தை பல மாநிலங்களின் வனத்துறைகள் தங்களது வன மேம்பாட்டு முகமைகளின் வாயிலாக நிறைவேற்றி வருகின்றன. அத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பலதரப்பட்டப் பணிகளின் மீது கள ஆய்வுகள் நடாத்தி அவற்றின் உண்மை நிலைவரத்தை கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் வாரியத்திற்கு அறிக்கைகள் அனுப்பி வைத்தது.
-
அவ்வாறு மேற்கொண்ட வன மேம்பாட்டு முகமைகளில் தமிழகத்தில் அரூர், கள்ளக்குறிச்சி, ஓசூர், திருப்பத்தூர்; ஆகியவைகளும், கர்நாடக மாநிலத்தில் கார்வாரும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிடலூரும் அடங்கும்.
-
மறைந்த முன்னாள் பிரதமர் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்திய அரசின் 20 அம்சத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மரம் வளர்ப்புப் பணிகளின் இன்றைய உண்மை நிலைவரத்தை கள ஆய்வுகள் நடாத்தி அவற்றின் உண்மை நிலைவரத்தை கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் இந்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வைத்தது. அவ்வாறு மேற்கொண்ட ஆய்வுகள் கர்நாடக மாநிலத்தின் கடக் மாவட்டமும் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா, நால்கொண்டா மாவட்டங்களும் அடங்கும்.
-
பல்லார்ப்பூர் காகிதத் தொழில் நிறுவனத்தின் கச்சாப்பொருள் உற்பத்திக்காக ஒரிசா மாநிலத்தில் தனியார் மரத்தோட்ட வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் யு+கலிப்டசு மரத் தோட்டத்தின் வளர்ச்சி நிலைவரத்தை கள ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் தொழில் நிறுவனத்தார்க்கு அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் அறிக்கைகள் அனுப்பி வைத்தது.
-
J.K .மில் காகிதத் தொழில் நிறுவனத்தின் கச்சாப்பொருள் உற்பத்திக்காக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தனியார் மரத்தோட்ட வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் யுகலிப்டசு மரத் தோட்டத்தின் வளர்ச்சி நிலைவரத்தை கள ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் தொழில் நிறுவனத்தார்க்கு அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் அறிக்கைகள் அனுப்பி வைத்தது.
-
உலக வங்கி நிதி உதவியுடன் ஆழிப் பேரலையால் விளைந்த அழிவிலிருந்து மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் வன வளர்ச்சிப் பணிகள், அவற்றிற்கு இயைவாக நிறைவேற்றப்படும் ஊரக மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றின் உண்மை நிலைவரத்தை கள ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து அத்திட்டம் மேலும் சிறக்கவும் மேன்iயுறவும் தமிழக வனத்துறைக்கு அறிவுரைகளுடனும் பரிந்துரைகளுடனும் அறிக்கைகள் அனுப்பி வைத்தது.
-
இந்திய அரசின் தேசிய காடு வளர்ப்பு மற்றும் இயற்கைச் சூழல் மேம்பாட்டு வாரியத்தில் வன அறிவியல் வல்லுநராகப் பணியாற்றியது.
-
கடந்த இரண்டாண்டுகளாக, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவில் உறுப்பினராகப் அமர்த்தப்பட்டு பணிசெய்தது. பணிக் காலத்தில் குழுத்தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்கி வனத்துறை, கல்வித்துறை, போக்குவரத்துததுறை மற்றும் அரசின் பொது நிர்வாகத்திற்கான ந-புழஎநசயெnஉந ஆகியவற்றை உள்ளடக்கிய நிர்வாகச் சீர்திருத்தக் கருத்துக்களை அறிக்கை வாயிலாக குழுத் தலைமைக்கு தெரியப்படுத்தியது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் :
5
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆண்டு :
|
|
|
பதிப்பகம் :
|
|
|
புத்தக வகை :
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சண்முகசுந்தரம், ச
அவர்களின் புத்தகங்கள்
|
|
|
|
|
|
1 2 3 4 5 |
வனங்கள் - ஓர் அறிவியல் விளக்கம்
|
|
|
|
1 2 3 4 5 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|