இயற்பெயர் சுரேஸ் கண்ணன். பார்மசிப் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றவர். இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான "சினிமா பாரடைசோ" நற்றிணை பதிப்பகத்திலும், இரண்டாவது மொழிபெயர்ப்பு நூலான "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்" காலச்சுவடு பதிப்பகத்திலும் வெளிவந்தது. இவ்விரண்டு நூல்களும் இலக்கியவாதிகள், திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட ஆளுமைகள் ஆகியோரிடமிருந்து பெரும் பாராட்டையும் வரவேற்பினையும் பெற்றது. "ஒரு படத்தின் திரைக்கதையை எப்படி புத்தக வடிவில் கொண்டு வரவேண்டுமென்பதை தானே கற்றுத் தேர்ந்துள்ளார்." எனத் திரைப்பட இயக்குநர் அம்ஷன் குமார் இவரைப் பாராட்டியுள்ளார். தற்போது தனது முதல் திரைப்படத்தை இயக்கும் முயற்சிகளில் யுகன் ஈடுபட்டு வருகிறார்.