திருமதி நங்கை குமணராசன் (1965), மும்பையில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று வாழ்வை அமைத்துக் கொண்டவர். தாய்மொழித் தமிழில் கல்வி கற்க வாய்ப்பற்ற நிலையில் ஆங்கிலவழிக் கல்வி கற்றவராயினும், தன் சொந்த முயற்சியில் ஓரளவு தமிழ்ப் புலமையும் வளர்த்துக்கொண்டவர். தமிழ், தமிழர் தம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன் சிந்தையில் உதிக்கும் செய்திகளை அவ்வப்போது மும்பையிலுருந்து வெளிவரும் இதழ்களில் எழுதி வருபவர். மும்பையின் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றின் துணையுடன் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். இவரின் தந்தையார் மும்பையின் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் ஆவார். மும்பைத் தமிழர்கட்கு அறிமுகமான சு.குமணராசன் அவர்களைத் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டு செல்வன் இங்கர்சால், செல்வி சகானா ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் இனிதே வாழ்ந்து வரும் இவர், புதிய வாழ்வுக்கு வழிகாட்டும் நங்கையாவார்.