சென்னை மாநிலக்கல்லூரியில் முதுகலை பயின்று முதல் வகுப்பில் தேறி நெறியாளர் இன்றி முனைவர் பட்டம் பெற்று திருச்சி தூயவளனார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். மலேசியாவில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டும், சிங்கப்பூரில் சொற்பொழிவாற்றி பிறநாட்டினர் பாராட்டுப் பெற்றவர். பாசகவியின் கர்ண பாரதத்தை மொழிபெயர்த்து வடமொழிக்கல்லூரிகளில் பாடநூலாகக் கண்டவர். பல்வேறு சீரிய அமைப்புக்களின் பாராட்டைப் பெற்றவர்.